சென்னையில் எண்பதுகளில் டவுட்டன் அருகே தினமும் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நடமாடும் தபால் நிலையம் இயங்கி கொண்டிருந்தது. Courier வசதி இல்லாத காலத்தில் கடைசி நிமிடத்தில் அனுப்பவேண்டிய முக்கியமான தபால்களை இதில் சேர்க்கலாம்.நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது இந்த வண்டியை ஒரு அச்சிரியதொடு பார்த்துக்கொண்டு இருப்பேன். உள்ளே அது ஒரு அலுவலகம் போல் கட்சி அளிக்கும். மூன்று அல்லது நான்கு நபர்கள் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். இருபக்கமும் பெரிய பெரிய ஜன்னல்கள் திறந்து கவுண்டர்களாக அக்கி ஸ்டாம்ப், போஸ்ட் கார்டு, இன்லாந்து லெட்டர் விற்று கொண்டிருபார்கள்....
கடந்த பத்து வருடங்களில் ஒரு முறை kooda போஸ்ட் ஆபீஸ் படி ஏறியதில்லை
துரிதமாக மாறி வரும் நம் சென்னையில் ஸ்டாம்ப், போஸ்ட் கார்டு போன்றவற்றை நாம் மறந்தே விட்டோம்....
வலையில் சரியான படம் சிக்கவில்லை....வேறு வழியில்லாமல் இந்த படத்தை சேர்த்துள்ளேன்.
உங்களில் யாருக்கேனும் mobile post office பற்றி தெரிந்தால், பார்த்திருந்தால் பின்னுட்டம் இடவும்.

No comments:
Post a Comment