Sep 25, 2009

எப்பிடி இருந்த நான் எப்பிடி ஆயிட்டேன்......

அருண் ஹோட்டல்



பிறகு பிறகு

சுமார் இருபத்து வருடங்களுக்கும் மேலாக அமிஞ்சிக்கரை, அய்யாவு நாயுடு காலனி, பொன்னுவேல் பிள்ளை தோட்டம், என் எஸ் கே நகர் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் , பஸ் கண்டக்டர் களுக்கும் மிகவும் பரிச்சியமான பஸ் ஸ்டாப், அருண் ஹோட்டல். அதுக்கப்புறம் காணாமல் போய் ஐந்து வருஷம் அனாலும்... பஸ் ஸ்டாப் அதே அருண் ஹோட்டல் தான்....

நான் ஸ்கூல் படிக்கும்போது, கூவம் நதி கரையினில் இருக்கும் இந்த ஹோட்டல் மீது ஒரு நல்ல அபிப்ராயமே கிடையாது.....கப்பு தாங்கல...இங்கெல்லாம் எவன்டா தங்குவான் என்று நினைத்த காலம் உண்டு....அனால் அந்த ஹோட்டல் பற்றி பலவாராக விஷயங்கள் பேசப்படும்.... I often use to hear lot of sleazy stories about the place....

ஆறேழு வருஷங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் தரை மட்டமா இடிக்கப்பட்டது.....அதுக்கப்புறம் கட்டறாங்க கட்டறாங்க ஒரு வழியா அம்பா ச்க்ய்வாக் அடுத்த வாரம் திறக்குரங்க.....

சென்னை வெட்டி பயல்களுக்கு கடலை வாசிகளுக்கு இன்னொரு இடம் கடைச்சுது....இரண்டாயிரம் இருக்கைகளுடன் பீ வீ அர் சினிமா வரவிருக்கிறது..என்ஜாய் ...

Sep 24, 2009


ஒன்றரை வருடங்கள் கழித்து மிகவும் 'மிஸ்" பண்ணிய ஒரு விஷயம்...வூட்லண்ட்ஸ் டிரைவ் இன்.

சென்னையில் விற்பனை பிரதிநிதிகளுக்கு வாரம் இருமுறை டிரைவ் இன் விசிட் அடிக்காட்டி எந்த வேலையும் ஓடாது. ஜெயலலிதா கண்ணகி சிலையை எடுத்த மாதிரி இந்த அரசு வூட்லண்ட்ச துக்கிடங்க....இதுல வேற பார்க் வருது ....ம..று
வருதுன்னு கதை...இன்னமா புளுகு மூட்டை அவுத்து வுட்ரனுங்கப்பா

சுமார் பதினைந்து வருடங்களில் நான் அங்கு போகாத வாரமே இல்லை. அந்த சப்பாத்தி டேஸ்டே அலாதியானது...வேளச்சேரி நண்பனாகட்டும், உடன் வேலை பார்க்கும் கலீக் ஆகட்டும் மணி கணக்கிம் உக்காந்து அரட்டை அடிக்க சரியான இடம் வூட்லண்ட்ஸ் மட்டுமே....

ஒருபக்கம் ஆம்வே போன்ற எமேலேம் ஆட்கள், ஒருபக்கம் காரிலேயே
தம் அடித்துக்கொண்டு போண்டா சாப்பிடும் கோளிவூடின் சிறு நடிகர்கள்....இன்னொரு பக்கம் சேல்ஸ் டீமை ரிவ்வ்யு
செய்யும் மானேஜர்கள்.....கடலை வருக்கும் ஜோடிகள்....ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் , மாலை நான்கு மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கும் பீ பீ சினிவாஸ், துரித கதியில் சாப்பிட்டுவிட்டு அடுத்த கஸ்டமரை பார்க்க ஓடும் ரெப்ஸ்.....மொத்தத்தில் அது ஒரு கலகலப்பான இடம்....

உலகின் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு....வூட்லண்ட்சில் வுக்காந்து யோசிச்சால் ஐடியா சும்மா அப்பிடியே வரும் பாருங்க.....

இன்னொன்னு கவனிச்சிங்களா.....இந்த பொருளாதார சரிவு வூட்லண்ட்ச மூடினப்புறம் தான் வந்தது....